Powered By Blogger

Friday, September 16, 2011


வெறும் வேலை பெறுவதற்காக மட்டும் படிப்பு என்பதை மாற்றி,புதிய கண்டுபிடிப்புகளை இன்றைய இளைஞர்கள் உருவாக்க வேண்டும் எனகருத்தரங்கில்சென்னை ரீச் ஐ.டி., கம்யூனிகேஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் முகமது ஆசாத் பேசினார்.
திருச்செங்கோடு செங்குந்தர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெடிக்கல் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளின் சார்பில்தேசிய தொழில் நுட்பக் கருத்தரங்கு நடந்தது.
சென்னை ரீச் ஐ.டி., கம்யூனிகேஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் முகமது ஆசாத் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவதுஇந்தியாஇளைஞர்களை நம்பியுள்ளது..., படிக்க போட்டி அதிகமாக உள்ளதுவேலை பெறுவதற்காக மட்டும் படிப்பு என்று இல்லாமல்புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, 80 வகையான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் பொருத்திய கார்கள் வந்து விட்டனஎலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும்நாம் சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடிகிறது.
பல நன்மைகள் இருந்த போதும்பயன்படுத்துபவர்களை பொறுத்து சில தீமைகளும் நேர்கிறதுநம்மை கெடுக்கும் தீயசக்திகளாக டிவியும்மொபைல் போனும் உள்ளனஅறிவியல்வளர்ச்சியின் அடையாளங்களாக இருந்தாலும்நாம் இந்த கருவிகளின் அடிமைகளாக இருப்பதுநமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. மொபைல் போன்கள்மாணவர்களின் காலத்தை வீணாக்குகிறதுதொடந்து,மொபைல் போனை பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவியலைமனித வாழ்க்கைக்கு பயன்படும் விதமாக பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும்ஸ்பாட் ஆன் டிவைஸ் என்ற கருவியை மேல் நாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் பயன்படுத்துகின்றனர்அதன் மூலம் நாம் நேரில் சந்திக்க முடியாதவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறதுசோதனையை சாதனையாக்கி காட்ட மாணவர்கள் பழக வேண்டும்படிக்க வேண்டும்சிந்திக்க வேண்டுமசமுதாய பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக உங்கள் படிப்பு திகழ வேண்டும்திறமை நம்மிடம் இருந்தால் தான்நாம் நல்ல கம்பெனியை தேர்ந்தெடுக்க முடியும்" இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment